அடக்கமுடியாத நதியே
adakkamudiyaadha nadhiyae
அடக்கமுடியாத நதியே அடக்க முடியாத அலையே உடைக்க முடியாத உறவே உடைக்கப்படுதே என் சுயமே நிறைந்து வழியும் என் அகமே நினைக்கும் பொழுதும் உம் முகமே
என் கட்டுப்பாட்டின் எல்லை கோட்டை கடந்துவிட்டேன் கர்த்தரின் ஆவியினால் என் இஷ்டப்படி ஏதும் செய்ய இயலவில்லை கர்த்தரின் வசமானேன் என் கால்களும் மண்ணோடு உல்லாக விலக சில நேரம் உலகத்தை வெறுப்புடன் உதற கர்த்தரின் ஆவிக்குள் நான் வாழ்கிறேன் நீச்சலின் ஆழத்தில் நான் மூழ்கிறேன்
கணுக்கால் அளவு போதவில்லை கதறி நான் ஜெபிப்பேன் முழங்கால் அளவிலும் திருப்தியில்லை முழங்கால் முடங்கிடுவேன் உறங்கிடும் நதிதனில் நிதம் நிதம் அணுகி இறங்கிடும் நேசத்தால் உலகினை மறந்தேன் சின்ன வட்டங்களை விட்டு வெளியேறினேன் அன்றைக்கு நான் திட்டங்களில் அனலாகினேன்