அடைக்கலமே நீர்தான்
adaikkalamae neerdhaan
அடைக்கலமே நீர்தான் இயேசுவே என் ஆதாரம் நீரே இயேசுவே ஆராதனை ஆராதனை உமக்கே என் ஆராதனை - 2
1. உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லை உம்மால் எல்லாமே கூடுமையா - 2 இந்நாள் வரை என்னை நடத்தினீர் எபினேசர் நீர்தானையா (2) - ஆராதனை
2. என் துன்பத்தின் நாட்களில் துணை நின்றீரே என் கண்ணீரைத் துடைத்தவரே - 2 கரம் பிடித்தீரே என்னை நடத்துவீர் என்னை தாங்கும் தகப்பன் நீரே (2) - ஆராதனை
3. எல்லா தடைகளை நீக்கும் வல்லவரே வழிக்காட்டும் நல்லாயனே - 2 தேவைகளை நீர் சந்திப்பீர் - என் மறவாத என்நேசரே (2) - ஆராதனை