அடைக்கலமான தேவா
adaikkalamaana devaa
அடைக்கலமான தேவா புகலிடமான தேவா என்னோடு இருந்து என்றும் புதிய காரியத்தை செய்வீர்
அல்லேலூயா அல்லேலூயா சர்வ வல்லவரே அல்லேலூயா அல்லேலூயா உம் கிருபை என்றும் உள்ளதே
1. நொறுங்குண்ட உள்ளத்தோடு வருவோரை தேவனே நீர் ஒரு போதும் புறக்கணியீர் மனதுருகி எங்கள் கரம் பிடித்து மார்போடு உம்மில் அணைத்துக் கொள்வீர்
2. மேற்கிற்க்கும் கிழக்கிற்கும் உள்ள தூரம் என் பாவங்கள் அகன்றிட செய்தவர் நீர் தாய் தன் பிள்ளைகட்காய் துடிப்பது போல் தாய் மனம் கொண்டவர் நீர் அல்லவோ
3. என் கால்களை கன்மலையின் மேல் நிறுத்தி என் நடைகளை உறுதிப்படுத்தினவர் நீர் மான்கால்கள் போல என் கால்களை மன்னவா உமக்காய் ஓடசெய்வீர்