அபிஷேகம் வந்திறங்குதே ஆவிக்குள்
abishegam vandhirangudhae aavikkul
அபிஷேகம் வந்திறங்குதே ஆவிக்குள் அகமகிழவே – 2 ஆவியால் நிறைந்திடும் போது தரிசனம் தோன்றிடுதே – 2
ஆவியின் மாமழை பொழியுதே மாம்சமான யாவர் மீதும் – 2
ஆவிக்குள் ஜீவிப்பதே ஜெயம் பெறும் வாழ்வாகுமே மாம்சம் உலகத்தை முற்றும் மேற்கொள்ளும் ஜீவியமே – ஆவியின்
ஆவியின் பெலத்தால் நிறைந்தே கோலியாத்தை வீழ்த்தினானே தாவீதைப் போல் அபிஷேகத்தால் என்றென்றும் நிறைந்திருப்போம்- ஆவியின்
அபிஷேகம் இழந்திடாதே சிம்சோன் சவுலைப் போல உந்தன் வாலிப ஜீவியத்தில் எச்சரிக்கையுடன் வாழ்ந்திடு – ஆவியின்
ஆவிக்குள் ஜீவித்திடு ஆவியில் அனலாயிரு ஆண்டவர் இயேசு அளிக்கும் பரலோக பாக்கியமே – ஆவியின்