அபிஷேகம் இறங்குது
abishegam irangudhu
அபிஷேகம் இறங்குது அனல் கொண்டு வீசுது வல்லமை பெருங்காற்று
ஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது ஆவியின் பெருங்காற்று வீசட்டும் வீசட்டும் ஆவியின் காற்று வீசட்டும் அக்கினி சுழல் காற்று
1. அக்கினி நாவுகள் இறங்கிடுதே - எங்கும் புது புது வல்லமை பெருகிடுதே அற்புதம் நடக்கின்றதே பேய்களும் பறந்தோடுதே
2. எலியாவின் வல்லமை இறங்கிடுதே - இங்கு எலிசாவின் வல்லமை கூடிடுதே இரட்டிப்பு வல்லமையே - அது இயேசுவின் வல்லமையே
3. ஆவியின் வல்லமை வீசிடுதே - உலர்ந்த எலும்புகள் எல்லாம் கூடிடுதே உன்னத சக்தி இதே - இங்கு அற்புதம் செய்கின்றதே