அபிஷேக நதி பாயுதே
abishega nadhi paayudhae
அபிஷேக நதி பாயுதே ஆனந்த தைலம் பெருகுதே அல்லேலூயா சத்தம் கேட்குதே ஆவியானவர் வந்து விட்டாரே -2
ஆடுவோம் கொண்டாடுவோம் ஆனந்தமாய் நடனமாடுவோம் கூடுவோம் பாடி போற்றுவோம் இந்தியாவை சொந்தமாக்குவோம் லாலாலா லலலலலா (4)
ஆழங்கள் நோக்கி செல்லவே ஆண்டவரின் பாதை தெரியுதே நீச்சல் ஆழம் மூழ்கி திளைக்கவே ஆவியானவர் வந்து விட்டாரே-2
ஜீவ நதி பெருகி ஓடுதே ஜீவ ராசி பிழைத்து பெருகுதே ஆரோக்கியம் செழிப்பு ஓங்கவே ஆவியானவர் வந்து விட்டாரே
கரைகளெல்லாம் புரண்டு ஓடவே மீன்களெல்லாம் பலுகிப் பெருகுதே மீனவர்கள் வலைகள் நிரம்பவே ஆவியானவர் வந்து விட்டாரே