அபிஷேக நாதரே அக்கினி
abishega naadharae akkini
அபிஷேக நாதரே அக்கினி நேசரே வல்லமையோடு எங்கள் நடுவில் உலாவி வாருமே
ஆரோன் சிரசினிலே ஊற்றப்பட்டவரே ஆசாரியராகராஜாக்களாக அபிஷேகித்திடுமே அபிஷேகத்திடுமே
ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் செய்பவரே சுவிசேஷகனாக தீர்க்கத்தரிசியாய் அபிஷேகித்திடுமே அபிஷேகித்திடுமே
தாவீதின் குமாரனாய் இறங்கி வந்தவரே வரங்களினாலும் வல்லமையினாலும் அபிஷேகித்திடுமே அபிஷேகித்திடுமே
உன்னதபெலத்தினால் உள்ளத்தை நிரப்புமே உம்மைப் போலாக்குமே மறுரூபமாகவே அபிஷேகித்திடுமே அபிஷேகித்திடுமே