ஆயிரம் தலைமுறைக்கும்
aayiram thalaimuraikkum
ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர் ஆயிரம் நன்மைகளால் நிறைத்திடுவார் - 2
அவர் உண்மையுள்ளவர் என்னை மறப்பதில்லையே அவர் நன்மை செய்பவர் அதில் மாற்றம் இல்லையே – 2
1. தீங்கு வரும் நாளில் கூடார மறைவினில் சேதம் அணுகாமல் காத்திடுவார் - 2 வாதை என் கூடாரம் அணுகவே அணுகாது உன்னதமானவர் என் நிழலே – 2 அவர் உண்மையுள்ளவர்
2. மரணபள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் கூடவே இருந்து காத்திடுவார் - 2 அழுகையின் பள்ளத்தாக்கை களிப்புள்ள நீரூற்றாய் மாற்றிடும் தேவன் என் துணையே – 2 அவர் உண்மையுள்ளவர்