ஆயிரம் தாயின் அன்புக்கு
aayiram thaayin anbukku
ஆயிரம் தாயின் அன்புக்கு மேலாக என் மேல் நேசம் வச்சவரே விவரித்து சொல்ல எனக்கு ரொம்ப ஆசை சொன்னாலும் வாழ்நாள் போதாதே - 2
திரும்பும் திசையெல்லாம் அரவணைப்பை உணர்ந்தேன் பார்க்கும் நொடியெல்லாம் கரம் அதை நான் கண்டேனே - 2
என் நினைப்பாவே இருப்பவர் நீரே என்னை நெனச்சு நெனச்சு ரசிப்பவர் நீரே - 2
தேவைகள் வரும்போது தேடி வரும் மனிதனல்ல தேவைகள் முடிந்தபோது தூக்கி எரியும் மனிதனல்ல
என்னை விட்டுக்கொடுக்க தெரியாதவர் என்னை மறக்கவும் முடியாதவர் - 2 - திரும்பும் திசையெல்லாம்