ஆயிரம் மடங்கு உயருவேன்
aayiram madangu uyaruven
ஆயிரம் மடங்கு உயருவேன் என் இயேசுவின் நாமத்தினாலே சத்துருவின் சதிகளை முறியடிப்பேன் என் இயேசுவின் நாமத்தினாலே -2
முடியாதென்று உள்ளம் சொன்னாலும் உந்தன் பெலத்தால் எல்லாம் முடித்தீரே வாழ்க்கை முடிந்ததென்று உலகம் சொன்னாலும் புதிய துவக்கத்தை என்னுள் தந்தீரே நினைத்து பார்க்காத அற்புதங்கள் செய்தீரே எண்ணுக்கடங்காத நன்மைகளை தந்தீரே
நன்றி நன்றி ஐயா உமக்கு நன்றி ஐ (2)
நாட்கள் கடந்ததென்று என் உள்ளம் ஏங்கினாலும் குறித்த காலத்திலே நன்மைகளை தந்தீரே தீமைகள் துரோகங்கள் எனை சூழ்ந்து நின்றாலும் - நன்மையும் கிருபையும் என்னை தொடரச் செய்தீரே கண்ணீரை எல்லாம் களிப்பாக மாற்றினீர் கெம்பீரத்தோடு அறுவடையை துவக்கினீர்