ஆயிரம் ஆயிரம் ஆயிரம்
aayiram aayiram aayiram
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் வாக்குத்தத்தங்கள் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் கூடி வாழ்த்துங்கள்-2 வார்த்தையில் உண்மையுள்ளவர் அவர் வாக்கு மாறாதவர்-2
வலப்பக்கமும் பெருகுவாய் இடப்பக்கமும் பெருகுவாய் உன் எல்லைகளை விரிவாக்குவாய்-2 ஜாதிகளை மடங்கடித்து பாழாய் கிடந்த பட்டணங்களில் ஆண்டவர் குடியேற்றுவார் -2
வெட்கப்படுவதில்லை இலட்சை அடைவதில்லை பயப்படாதே என்று சொன்னவர் அவரே உன் சிருஷ்டிகர் அவரே உன் நாயகர் இஸ்ரவேலின் பரிசுத்தர் அவர்
மலைகள் விலகிப் போகும் பர்வதம் அகன்று போகும் கர்த்தர் கிருபை மாறாதது நீதியினால் ஸ்திரப்படுத்தி திகிலுக்கு தூரமாக்கி இன்றும் என்றும் நம்மை காப்பவர்