ஆயிரம் ஆண்டு ஆட்சியிலே
aayiram aandu aatsiyilae
ஆயிரம் ஆண்டு ஆட்சியிலே அடைவோம் ஜீவன் அவனியிலே
ஆண்டவர் இயேசு ஆட்சி செய்ய நியாயத்தீர்ப்பு பெற்றோங்கும் ஏதேனில் ஆதாம் செய்வினையால் தீதுரும் சாவு வந்ததையோ மா தேவ மைந்தன் சாதனையால் மரண சாபம் நீங்குதையா
மரித்தோர் மீண்டும் வந்திடுவார் கிறிஸ்து ராஜா வந்திட்டாரே தரித்தே ஆட்சி செய்கிறாரே கருத்தாய் நாமோ கண்டிடுவோம்
திவ்ய சுபாவ பங்கடைய பலியினால் உடன்படிக்கை பண்ணிய பரிசுத்தோரை தாம் தன்னிடம் கூட்டிச் சேர்த்திட்டாரே
மெய்விசுவாச பாதையிலே பெளவியமாக பாடுபட்டோர் மேன்மையாக உயிர்த்தெழுந்து பாக்கியவான்கள் ஆகிடுவார்
இத்தரையோர் எழுந்திடுவார் உய்யும் உயர் வழியை க்றிஸ்து போதித்து தேவ கற்பனைகள் சாதித்து நிற்கச் செய்திடுவார்
சோதித்து நித்ய ஜீவன் பெற போதித்து நீதித் தீர்ப்புச் செய்வார் கீழ்ப்படிந்தவர் வாழ்ந்திடவே மற்றவரெல்லாம் மாய்ந்திடவே
ஆபிரகாமின் மா வித்துக்குள் பூமியில் தோன்றும் மக்களெல்லாம் சோபித ஆசீர் பெற்று என்றும் சுவிசேஷத்தைப் பூர்த்திசெய்வார்