ஆயிரக்கணக்கான வருடங்களாய்
aayirakkanakkaana varudangalaay
ஆயிரக்கணக்கான வருடங்களாய் - எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ராயேல் சனங்களை ஆளவரும் - எம் இயேசு இரட்சகரே எழுந்தருள்வீர்
ஒசான்னா தாவீதின் புதல்வா ஒசான்னா ஓசான்னா ஒசான்னா
மாமரி வயிற்றினில் பிறந்தவரே தெய்வீக கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தினில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீரே - ஓசான்னா
தாவீது அரசரின் புத்திரரே ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமர் எனப் புகழ் அடைந்தவரே எம் தேவனே தேவனே வருவிரே - ஓசான்னா