ஆயிரக்கணக்கான
aayirakkanakkaana
ஆயிரக்கணக்கான வருடங்களாய் -எம் ஆண்டவரே உம்மை எதிர் பார்த்தோம் இஸ்ராயேல் ஜனங்களை ஆளவரும் - எம் இயேசு இரட்சகரே எழுந்தருளும்.
ஓசானா தாவீதின் புதல்வா ஓசானா ஓசானா ஓசானா
மாமரி வயிற்றினில் பிறந்தவரே - மா முனிசூசைக் கரங்களில் வளர்ந்தவரே மானிடர் குலத்தினில் உதித்தவரே - எம் மன்னவரே எழுந்தருள்வீரே
அற்புத யோர்தானில் தீட்சை பெற்றீர் - மா அருள் தாபோதனரால் புகழப்பட்டீர் ஆகாயங்களை நீர் திறக்க விட்டீர் - உம் ஆதி பிதாவிடம் பதவி பெற்றீர்
தாவீது அரசரின் புத்திரரே - ஓர் தெய்வீக முடியோடு வந்தவரே தருமரெனப் புகழ் அடைந்தவரே - எம் தேவனே தேவனே வருவீரே
கானான் மணத்தினில் அழைக்கப்பட்டீர் - நீர் கலங்கினவர்கள் பேரில் இரக்கப்பட்டீர் கொண்டுவரச் சொன்னீர் சுத்த தண்ணீர் - அதை சுத்த ரசமாக்கிப் பெயரடைந்தீர்
புவியினில் புரிந்தீர் புண்ணியங்கள் - எம் புத்தியில் புகுத்தினீர் அருள் மொழிகள் பக்தியில் சேர்த்தீர் பல சீடர்கள் - மா பவனியோடு வாரீர் படைத்தவரே
குருடர்கள் அனேகர் ஒளி பெற்றார் - முடம் கூன் செவிடர் பலர் சுகம் பெற்றார் குஷ்டர் அதிகமே நலம் பெற்றார் - எம் கடவுளே எம்மோடே வாரும் நீரே
மரித்தவர்கள் பலர் உயிர் பெற்றார் - ஒரு மனமுடைந்த விதவை மகன் அடைந்தார் மரிமதலேன் சகோதரன் பெற்றொர் - எம் மனுக்குலம் இரட்சிக்க வந்தவரே
யூதேயா நாட்டினில் புகழப் பெற்றீர் - எம் யூதர் ராஜனென்று முடிபெற்றீர் யெருசலேம் நகர் தனில் களிப்புற்றீர் - எம் இயேசு அரசனே அரசாள்வீர்
பாவிகளைகத் தேடி வந்தவரே - எம் பாவங்கள் போக்க வல்லவரே பாடுகள் பட்டு உழைத்தவரே - எம் பராபரனே உட்செல்வீரே
கோவேறு குட்டியை ஆசனமாய் - எம் குழந்தைகள் துணியே பஞ்சணையாய் கிளைகளே உமது ஜெயக் கொடியாய் - எம் கர்த்தரே சீக்கிரம் நடப்பீரே
உலகமே உமது அரிய வேலை - எம் உயிருமே உமது மா புதுமை உலகத்தை ஆண்டு வருபவரே - எம் உலகரசே உள்ளே புகுவீரே