ஆயத்தமா இதோ ஆயத்தமா
aayathamaa idho aayathamaa
ஆயத்தமா இதோ ஆயத்தமா? கர்த்தர் வருகிறார் ஆயத்தமா?
நடு ராத்திரியின் சத்தம் நம் காதினில் தொனிக்க வில்லையோ?தாமதமேன் பின்னும்.
1. காலமிது கடைக் காலமிது கர்த்தர் வருகைக்குக் காலமிது அடையாளம் இதோ அனந்தம் காணுது காலம் சமீபித்த தென்றறிந்தபோது.
2. காலமிதில் மணவாளன் கர்த்தர் நினையாத நேரம் வந்திடுவார். மரித்த விசுவாசிகள் எழும்புவார் ஜீவனுள்ளோரும் மறுரூயஅp;பமாகுவார்.
3. மேகங்கள் மேல் சென்று ஆகாயத்தில் சந்திப்போம் கர்த்தரை முகமுகமாய் பலனளிப்பாரே யேசு மகா ராஜா சரீரத்தில் செய்த செய்கைக்குத்தக்கதாய்.
4. ராஜரீகம் பெற்று மகிமையாய் ராஜா எழுந்தருள்வார் வானத்தில் யேசு ராஜாவுடன் சிங்காசனத்தில் நாம் ஆளுவோம் பரத்தில் ஆயிரம் வருஷம்.
5. நியாயத்தீர்ப்பிருக்கும் முடிவினில் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு. மாறிப்போகுமே இவ்வானமும் பூமியும் தோன்றுமே புதிய வானமும் பூமியும்.