ஆயனே தூயனே வாரும்
aayanae thooyanae vaarum
ஆயனே தூயனே வாரும்- இந்த பாவியை உம் மந்தையில் சேரும் பாதைகள் மாறியே போனேன்-உலக மாயையால் பாவியாய் ஆனேன் ஓ....... ஓ.......
இயேசுவே நாதரே வாரும்-எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும் தேடி வந்து அழைக்கின்ற தெய்வமே-உம்மை நாடி வந்து பாடுகின்றேன் கேளுமே மானிடர் சுமைகளை சிலுவையாய்-நீர் சுமந்ததை இப்புவி அறியுமே கேளுங்கள் தரப்படும் என்றவர்-நீர் கேடுகள் அழிக்கவே பிறந்தவர் ஓ....... ஓ.......
இயேசுவே நாதரே வாரும்-எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும் நெஞ்சிலே நிம்மதி இல்லையே-உம்மைக் கெஞ்சினேன் ஆறதல் தாருமே வஞ்சகர் வலைதனில் மாயமே-அதை அறுத்திடும் இயேசு உம் நாமமே தாயினை மிஞ்சிடும் அன்பையே-உம்மில் காண்கிறேன் கர்த்தரே உம்மையே ஓ....... ஓ.......
இயேசுவே நாதரே வாரும்-எங்கள் பாடலின் வேண்டுதலைக் கேளும்