ஆயததாரி நான் அபாத்திரனே
aayadhadhaari naan abaathiranae
1. ஆயததாரி நான் அபாத்திரனே சேனாதிபதிக்கோ பின் செல்வேனே நில் செல் என்றவர் சொல்ல கேட்கவும் யேசுவின் நல் வாக்கை நம்பி வெல்லவும்.
பேரொலி கேட்குதே! ஜெயமுண்டாம்! போராடுவோம் முனை முகமெல்லாம். சேனாதிபதி என்னை நோக்குவார் ஆயததாரியையும் நம்புவார்.
2. ஆயததாரி நான் இந்நேரத்தினில் சன்னத்தனாகப் படை முகத்தில் போர்க்களத் தாரவாரங் கேட்கவே பயமுமில்லாமல் யுத்தம் செய்வேனே.
3. ஆயுததாரி நான் அசக்தனுமாய் காணப்பட்டாலும் வெற்றி வேந்தனாய் நித்திய காலம் மிக வாழுவேன் வான லோகந் தன்னில் சுகித்திருப்பேன்.