ஆவியின் பெருமழை
aaviyin perumazhai
1. ஆவியின் பெருமழை பொழிந்திடுமே தூய ஆவியே அழிவில்லா தேசிகரே அளவில்லா உமது ஜீவனை எமக்கு அளித்திட வருவீர் எமதரசே
அபிஷேகித்திடுவீரே - அபிஷேகித்திடுவீரே அடிமையின் நுகம் முற்றும் முறிந்திடவே - தேவா
2. அக்கினி நாவுகள் போல் வந்தீரே - அன்று அமர்ந்திட காத்துமே நின்றவர் மேல் அனலிடை அருளே வடிவுடை யொளியாய் அடியவர் மீதில் வந்தமர்ந்திடுவீர் - அபி
3. ஆலயமாகவே எம் காயமெல்லாம் - இதோ ஆதீனமாயுமக்கே அளித்துவிட்டோம் அனுதினம் நிறைவாய் நவபெலமளித்தே அபிஷேகித் துயிர்ப்பீர் அதிபரே நீர்- அபி
4. செய்குவீர் அற்புதங்கள் அடையாளங்கள் - இன்றே நல்குவீர் தரித்திட வரங்களெல்லாம் புல்லரும் வரவே உபதேச ஒளியில் வல்லமை தருவீர் எளியவர்க்கே - அபி
5. ஏகமாய் இணைந்தபி ஷேகத்தினால் - ஒரே தேகம் முதற்பலன் சபையதுவை ஏகமாய்க் கூட்டிட பூவின் நற்பலனாய் வேகம் மணாளனே வருவதால் - அபி