ஆவியே இறங்கும் இப்போது உந்தன்
aaviyae irangum ippodhu undhan
ஆவியே! இறங்கும் இப்போது - உந்தன் ஆசீர்வாதந் தர - அடியார்கள் மீது.
ஜீவாவியே! உமது திருவருளாலே தெளிந்து ஞானஸ்நானம் பெற்றவர் மேலே. - ஆவியே
1. அன்று யோர்தான் நதியதிலே - யேசு அமலன் முழகி ஸ்நானம் பெற்ற போதினிலே வந்தீர் புறா வடிவாய் வானந் திறக்கப்பட்டு அந்த விதமிவர்க்கும் அருளவ்வன்புற்று. - ஆவியே
2. பெந்தெகொஸ்தே நாளில் உமது சீஷர் பேரில் வந்திறங்கியே வரங்களைத் தந்தீர் சிந்தை மகிழ்ந்திட சிரமீதமர்ந்து மெய் ஞானஸ்நானத்தில் வழி நடத்தினீர். - ஆவியே
3. தேடும் வரங்களைத் தாரும் வேத ப்ரமாணத்தைக் கைக்கொள்ளச் செய்யும் நல் ஞானஸ்நானத்தை நாடிப் பெற்ற இவர் நன் மனச்சாட்சியில் நடந்திடத் தினமும். - ஆவியே
4. சத்தியம் யாவிலும் நடத்தும் - திவ்ய சத்திய ஆவியே! இவர்களைத் தேற்றும் இரவு பகலவர் பக்கத்தில் இருந்து பாதுகாத்தாண்டு நீர் - பண்புடன் உவந்து. - ஆவியே
5. தேற்றரவாளன் நீர்தாமே - உந்தன் திருவருளால் எல்லாத் தீமையும் போமே மாற்றமில்லா சத்ய தேவனே இன்றும் மக்களுக் கிரங்கியே வந்தருள் என்றும். - ஆவியே