ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன்
aaviyaanavarae ummai vaanjikkiren
ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன் மகிமையின் பிரசன்னம் நிறைவாய் இறங்கட்டும் இந்த வேளையிலே - 2
1. ஆவியிலே களிகூறவே என்றென்றும் விரும்புகிறேன் வாஞ்சிக்கிறேன் எந்நாளுமே உந்தன் சமூகத்தையே - 2 நேசர் முகம் காண்கையிலே ஆவியில் நிரம்புகிறேன் பாடி உம்மை துதிக்கையில் பரவசம் கொள்கிறேன்
2. தாவீது போல் மகிழ்ந்திடவே உம் சமூகம் வேண்டுகிறேன் ஆடிப்பாடி துதித்திடவே விடுதலை ஈந்திடுமே -2 உன்னதத்தில் உம்முடனே உறவாட உதவிடுமே ஆவிக்குள்ளாய் அனுதினமும் அனல் போல மாற்றிடுமே
3. மேல் வீட்டறை அனுபவத்தை என்றென்றும் தந்திடுமே ஆவிமழை கரை புரள தேசத்தை சந்தியுமே -2 தேசம் எல்லாம் அசைந்திடவே எழுப்பிடும் வாலிபரை எழுப்புதலால் புது உள்ளங்கள் உயிர்பிக்க செய்திடுமே (அஸ்திபாரம் அசைந்திடவே எழுப்பிடும் சபையோரை எழுப்புதலால் புது உள்ளங்கள் உயிர்பிக்க செய்திடுமே)