ஆவியானவரே ஆளுகை செய்யும்
aaviyaanavarae aalugai seyyum
ஆவியானவரே ஆளுகை செய்பவரே இறங்கி வர வேண்டுமே பிரசன்னம் தரவேண்டுமே
பலிபீடத்தில் என்னை படைத்து விட்டேன் பரிசுத்த கரங்களை உயர்த்தி விட்டேன் பரிசுத்த அக்கினி தாருமைய்யா பரவசம் நிரந்தரமாக்குமைய்யா
வரவேண்டுமே தரவேண்டுமே மகிமையினால் என்னை நிறைத்திடுமே
மேலோக அபிஷேகம் மேல் வீட்டறையில் சீஷர்கள் மேலே நீர் ஊற்றினீரே பற்பல பாஷைகள் பேசி மகிழ்ந்திட பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
எலியாவின் வரத்தை வாஞ்சித்த எலிசா மேல் இரட்டிப்பாய் கொடுத்தீரே அபிஷேகத்தை அற்புதம் செய்திட அதிசயம் நடத்திட அக்கினி ஆவியை ஊற்றிடுமே
ஆவியின் வரங்கள் ஒன்பதையும் பெற்று சபைகள் எழும்பி ஜொலித்திடவே மூப்பர்கள் கண்ட தரிசனம் நிறைவேற சேனையாய் வாலிபர் எழும்பட்டுமே