ஆவியான எங்கள் நல்ல தேவனே
aaviyaana engal nalla devanae
ஆவியான எங்கள் நல்ல தேவனே அச்சாரமாய் நீரே வந்தீரே-2 அனுதினம் எங்களுக்காக வாக்குக்கடங்கா பெருமூச்சோடு-2 வேண்டுதல் செய்கிறீர் நிரப்பி மகிழ்கிறீர்-2
நிரப்பிடுமே நிரப்பிடுமே உன்னதத்தின் பெலனால் நிரப்பிடுமே மூட்டிடுமே அனல் மூட்டிடுமே ஆவியின் அனலை மூட்டிடுமே-2-ஆவியான
1.கறை திரை அற்று நாம் வாழவே தூய ஆவியே தினமும் உதவுமே மணவாளன் இயேசுவை சேர்ந்திட பரிசுத்த அலங்காரம் தாருமே-2
மகிமையின் ஆவியே மறுரூபம் ஆக்குமே மறுரூபம் ஆக்கியே மகிமைக்குள் நடத்துமே-நிரப்பிடுமே
2.அழியும் ஜனங்களை மீட்கவே தேவ ஆவி எமக்குள் வாழுமே கனிகளும் வரங்களும் பெருகவே நீரே எம்மை ஆளுமே-2
பரிசுத்த ஆவியே தினமும் நடத்துமே வரங்கள் கனிகளால் எம்மை நிரப்புமே-2-நிரப்பிடுமே