ஆவியான தேவனுக்கு ஆனந்த சொரூ
aaviyaana devanukku aanandha soroo
ஆவியான தேவனுக்கு ஆனந்த சொரூபனுக்கு ஆவியிலே ஆராதனை அதிசயமானவர்க்கு ஆலோசனை கர்த்தருக்கு ஆனந்த ஆராதனை அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி ஆடிப் பாடி மகிழ்ந்திருப்போம் நம் இயேசுவை கொண்டாடுவோம்
துன்பம் நம்மை தேடி வந்து வாட்டுகின்ற வேளையிலும் மின்னலைப்போல் இயேசு வருவார் நொடிப்பொழுதில் துன்பங்களை விலக்கிடுவார் கண்ணிமைக்குள் கண்மணியை காப்பது போல கர்த்தர் நம்மை காத்திடுவார் செட்டைகளை மலைமீது வைத்திடுவார் அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
கண்ணீர் கடலில் முழ்கி கலங்கித் தவிக்கையிலே கலங்காதே என்று சொல்லுவார் கர்த்தர் நமக்கு அடைக்கலம் தந்திடுவார் பாவப் படுகுழியில் பயந்து நாம் சாகையிலே தேற்றிட இயேசு வருவார் நம்மை தூக்கியே எடுத்திடுவார் அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி