ஆவியால் நிரப்புங்கப்பா
aaviyaal nirappungappaa
ஆவியால் நிரப்புங்கப்பா அனல்மூட்டி எழுப்புங்கப்பா (உம்) -(2) உம் ஆவியின் வரங்களினால் அனுதினம் நடத்துங்கப்பா
ஊற்றுங்கப்பா உம் அபிஷேகத்தை நிரப்புங்கப்பா என் பாத்திரத்தை -(2)
1) சத்தியத்திலே என்னை நடத்துங்கப்பா உம் வழிகளை தினமும் காட்டுங்கப்பா -(2) உம் சாட்சியாய் என்னை நிறுத்துங்கப்பா உமக்காய் வாழனும்பா -(2)
2) மேல் வீட்டறையிலே இறங்கினீரே பிளவுண்ட நாவாய் வந்தீரே -(2) அன்னிய பாஷைகள் பொழிந்தீரே ஆதி சபைதனிலே -(2)
3)சிம்சோனால் சிங்கங்களை கிழிக்க வைத்தீர் யெகூவால் யெசபேலை அழிக்கவைத்தீர் -(2) தெபோராள் பாராக்கை எழுப்ப வைத்தீர் என்னையும் எழுப்புங்கப்பா -(2)