ஆத்துமா நீ ஏன் கலங்குகிறாய்
aathumaa nee en kalangugiraay
ஆத்துமா நீ ஏன் கலங்குகிறாய் தேவனை நோக்கிக் காத்திரு
பல்லவி
உன் தேவன் என்றென்றும் கை விடுவதில் உன் இரட்சகர் என்றும் உன்னை மறப்பதில்லை
மானானது நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல என் ஆத்துமா தேவனையே வாஞ்சித்து கதறுதே
பல்லவி
உன் தேவன் என்றென்றும் கை விடுவதில் உன் இரட்சகர் என்றும் உன்னை மறப்பதில்லை
பயங்களினால் நெருக்கத்தினால் எனக்குள்ளே உருகுகிறேன் வார்த்தையினால் என்னைத் தப்புவிப்பீர் களிகூரச் செய்யுவீர்
என் பெலனே என் கோட்டையே நான் நம்பும் கேடகமே கிருபையை என்றும் சார்ந்திடுவேன் என் ஜீவ நாளெல்லாம்