ஆத்தும நேசரின் காலடிகள்
aathuma nesarin kaaladigal
ஆத்தும நேசரின் காலடிகள் கேட்டிடும் சத்தம் யாரது சத்தம் ஆத்தும நேசரின் காலடிகள் பகலினில் வெயிலில் இரவினில் நிலவில் நாளெல்லாம் கேட்டது காலடிகள் - (2) - கேட்டிடும்
1. கதவைத் திறந்திட தாமதம் ஏனோ திறந்திட்ட பொழுதினில் நேசரில்லை - (2) வீதியில் ஓடினேன் தெருவெல்லாம் தேடினேன் நேசரில்லை, காலடிகள் - கேட்டிடும்
2. நேசரின் கால்தடம் பின் செல்லலானேன் சேர்ந்த இடம் அதோ கல்வாரியே! - (2) பாவிக்கு மன்னிப்பு, ஜீவனும் தந்தது கல்வாரியே! காலடிகள் - கேட்டிடும்