ஆத்தும நேசரே என் அருமை
aathuma nesarae en arumai
ஆத்தும நேசரே என் அருமை தேவனே உம் பாதம் நான் பற்றிக் கொண்டேன் உம் மார்பில் நான் சாய்ந்து கொண்டேன்
1. குழியிலே விழுந்த என்னை தூக்கியெடுத்தீரே கன்மலை மேலே என்னை நிற்க வைத்தீரே புதுப்பாட்டை எந்தன் நாவில் வைத்தவர் நீரே பரலோக தரிசனம் தந்தவர் நீரே
2. எனக்கெட்டா உயரத்தில் வைப்பவர் நீரே எனை என்றும் பாராட்டி வளர்ப்பவர் நீரே என் ஆவல் யாவையும் தீர்ப்பவர் நீரே என் நோயை குணமாக்கும் வைத்தியர் நீரே
3. எனை என்றும் போதித்து நடத்துபவரே எனக்காக யாவையும் செய்பவர் நீரே என்னோடு என்றென்றும் இருப்பவர் நீரே நன்மையும் கிருபையும் தொடரச் செய்வீரே