ஆத்தும நேசர் உன்னை
aathuma nesar unnai
1. ஆத்தும நேசர் உன்னை அழைக்கிறார் அவர் பாதம் அண்டிட இன்றே வந்திடாயோ பொல்லாத மாய உலகமழியுதே வல்லவர் இயேசு அழைக்கிறார்
இயேசுவின் நாமம் வல்லமையுள்ள தே இயேசுவின் நாமம் ஜெயமளிக்குமே இயேசுவின் நாமம் சாவினை நீக்கும் இயேசுவின் நாமம் ஒளஷதமே
2. இரட்சணிய பாதை தன் உதிரத்தின் இரக்கம் மீதிலே கொண்டதால் வகுத்தார் இன்னமும் இந்த மாபெரும் இரட்சையே இத்தருணம் நீ தள்ளிடாதே - இயேசு
3. மாயவலையில் சிக்குண்டு வீணிலே அயர்ந்திட அலையை போல் மயங்கி திரியும் யாரும் இல்லாத உரையும் அணைத்திட தாயுள்ளம் கொண்டோர் நிற்கிறாரே - இயேசு
4. தேவனின் ராஜ்ஜியம் காணவே இயலாத ஜலத்தினால் திரும்ப நீ பிறவா யாக்கை ஆவியினாலும் பிறந்திடுவதினால் ஆகுமே அதினுள் சென்றிடவே - இயேசு
5. நித்திரை விட்டு எழும்பும் வேளை நினையாத நேரத்தில் வருவார் இயேசுவே அவரை எந்த வேளையும் சந்திக்க ஆயத்தமாக ஜீவிப்பாயே - இயேசு