ஆத்தும ஆதாயம்
aathuma aadhaayam
ஆத்தும ஆதாயம் செங்குவோமே - இது ஆண்டவர்க்குப் பிரியம் நாமதினால் ஆசீர்வாதம் பெறுவோம்
சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன் தஞ்சத்தைப் பெற்றுநாமித்த மாவேலையில் ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில் அற்புதமான பலனை அடையலாம்
பாழுலக முழுதையும் ஒருவன் சம் பாதித்துக் கொண்டாலும் - ஒரு நாளுமழியாத ஆத்துமத்தை அவன் நஷ்டப்படுத்தி விட்டால் ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று ஏழை ரூபங்கொண்டு ஞாலமதில் வந்த எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே
கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க மட்டில்லா தேவசுதன் - வானை விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன் விட்டதும் விந்தைதானே துட்டை யருத்தியி னாத்துமத்தை மீட்க தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே இட்டமுடன் செய்த இரட்சண்ய வேலையை இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே