ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும்
aathmaakkalukkaay selavu pannavum
ஆத்மாக்களுக்காய் செலவு பண்ணவும் செலவு பண்ணப்படவும் உன்னை தியாகம் செய்வாயா?
1. ஆதாரமின்றி அழிந்து போகும் ஆத்ம மீட்பிழந்தவர்க்காய் ஆத்தும பாரம் கொண்டவனாய் ஆதாயம் செய்வாயா? – ஆத்மா
2. எண்ணற்ற மாணவர் நிலையிழந்து கண்ணற்ற நிலையிலுள்ளார் எண்ணற்ற ஆசிகள் பெற்ற நீயும் எண்ணியே பார்ப்பாயா? – ஆத்மா
3. கோதுமை மணி நிலம் விழுந்து செத்தால் அதிக பலன் தருமே பிறரது பாரத்தை உன் பாரமாய் ஏற்றிட துணிவாயா? – ஆத்மா
4. சாமுவேல், மோசே, நெகேமியா போன்ற தீர்க்கரை அறிவாயா? திறப்பின் வாசலில் நிற்க உள்ளம் திறந்து கொடுப்பாயா? – ஆத்மா