ஆத்ம நேசரோடு அன்பின்
aathma nesarodu anbin
ஆத்ம நேசரோடு அன்பின் ஆழம் சென்று ஆவலோடே நான் கெஞ்சிக்கேட்ட போது – 2 அபிஷேக நதி என்னில் பாய்ந்து வந்தது ஆனந்தத்தினால் என்னை அபிஷேகித்தார் – 2
அன்பே நிரப்பும் உயிரே நிரப்பும் பெலனே நிரப்பும் இனிதே நிரப்பும் – 2
1. ஆத்ம நேசரோடு உன்னதங்கள் சென்று மெய் மறந்து நான் அவர் மார்பில் சாய்ந்த போது – 2 மகிமையின் ஒளியை என் மேல் வீசச் செய்தார் மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் துள்ளுதே – 2 (…அன்பே)
2. ஆத்ம நேசரோடு அகமகிழ்வேனே இக்காலத்து பாடுகள் ஓய்ந்தொழிந்து போகும் – 2 மகிமை மகத்துவம் என்னை மூடிக்கொள்ளும் மறுரூபமாவேன் என் நேசர் சாயலாய் – 2 (…அன்பே)
3. தேவ ஜனத்தோடே நித்ய நித்யமாக ஆராதிப்பேனே என் நேசர் இயேசுவை – 2 தூதர் பாடும் தேசம் என் சொந்தமான தேசம் கண்ணீரில்லையே இனி கவலையில்லையே – 2 (…அன்பே)
4. ஆவியானவரே நன்றி நன்றி நன்றி அக்கினியினால் என்னை நிறைத்திட்டீரே – 2 இன்னும் வேண்டும் என்று கெஞ்சுதே என் ஆவி நிரப்பும் நிரப்பும் என்று உள்ளம் ஏங்குதே – 2 (…அன்பே)