ஆசிர்வாதம் தந்திடுவார்
aasirvaadham thandhiduvaar
ஆசிர்வாதம் தந்திடுவார் இயேசு அற்புதங்கள் செய்பவரும் இயேசு – 2
ஊற்றிடுமே தேவா ஊற்றிடுமே தேவ ஆசிர்வாதம் எங்கள் மீதிலே – 2
1. வானத்தை திறந்தவர் நீர் மன்னாவையும் தந்தவர் நீர் – 2 செங்கடலை இரண்டாக பிரித்தீர் இந்த நாளில் எம்மை ஆசிர்வதியும் – 2
2. கன்மலையை பிளந்தவர் நீர் தண்ணீரையும் தந்தவர் நீர் – 2 இஸ்ரவேலரை பெருக செய்தவர் இந்த நாளில் எம்மை பெருக செய்திடும் – 2
அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா