ஆசீர்வதியும் ஆசீர்வதியும்
aaseervadhiyum aaseervadhiyum
ஆசீர்வதியும் ஆசீர்வதியும் நேசர் கர்த்தாவே யாகோபாய் நான் வந்து உள்ளேன் பாச கர்த்தாவே - 2
இன்றே வேண்டுமே இப்போ தாருமே - 2 பொழுதே விடிந்தாலும் உம்மை விடேனே - நான் - 2
என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுமே என் விருப்பம் நிறைவேறுமே - 2 உம்மை அல்லாமல் என்னை யார் நடத்துவார் உம்மை அல்லாமல் என்னை யார் உயர்த்துவார் - 2
யாக்கோபு என்னும் சிறு பூச்சி நான் இஸ்ரவேலின் மீட்பர் நீர் துணை - 2 தேவனை கண்டு நான் உயிர் பிழைத்தேன் என்று நான் சொல்லுவேன் உம்மை உயர்த்தி - 2
உம் கிருபை எனக்கு வேண்டுமே எந்தன் வாழ்வு செழித்தோங்கும் - 2 நீர் வேண்டும் கர்த்தாவே எந்தன் வாழ்விலே அது போதும் என்றென்றும் நன்றி சொல்லுவேன் - 2