ஆசீர்வதிக்கும் தேவன்
aaseervadhikkum devan
ஆசீர்வதிக்கும் தேவன் தம் ஆசீர் பொழிந்திடும் நேரம் பெருக்கத்தை அளித்திடும் தேவன் நம்மை பெருகச் செய்வார் இவ்வருடம்
பெலத்தின் மேள் பெலனே கிருபையின் மேல் கிருபை மகிமையின் மேல் மகிமை பரிசுத்தம் பரிசுத்தமே என் வாழ்வில் பரிசுத்தம் பரிசுத்தமே
சோர்வான சூழ்நிலை வந்திடினும் எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும் நெருக்கத்திலும் பெருக்கத்தையே அளித்திடும் தேவன் நம்மோடுண்டு
வறண்ட வாழ்க்கை செழித்திடுமே கிருபையின் ஊற்றுகள் பெருகிடுமே நூறு மடங்கு பலன் தந்திடும் பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு
ஆத்தும பாரம் பெருகிடுமே ஊழியம் தீவிரம் அடைந்திடுமே திரள் கூட்டம் சீயோனையே நோக்கி வந்திடும் காலமிதே