ஆசீர்வாதம் பரிசுத்தம் ஆன நாள் இந்நாள் தானே
aaseervaadham parisutham aana naal innaal thaanae
ஆசீர்வாதம் பரிசுத்தம் ஆன நாள் இந்நாள் தானே. யேசு நாதர் நியமித்த இன்பமான ஓய்வு நாள்.
1. ஏதேன் சோலை தன்னிலே ஏற்படுத்தப்பட்ட நாள் ஆதாம் ஏவாள் இருவரும் ஆசரித்த ஓய்வுநாள்.
2. ஆபேல் முதலான மெய் ஆண்டவரின் பிள்ளைகள் பாபேல் மைந்தர் காணவே பக்தியோடாசரித்த நாள்.
3. பார்வோன் முன்னே எகிப்தில் பக்தர்கள் ஓய்ந்திருந்த நாள் சார்வோர் யார்க்கும் பரிசுத்தம் நான் கொடுக்கும் தெய்வ நாள்.
4. முற்பிதாக்கள் மூவரும் மோசே வரை யாவரும் கற்பனை கொடுக்கும் முன் காத்து வந்த ஓய்வு நாள்.
5. சீனாய் மலைமேல் நின்று தெய்வம் அறிவித்த நாள் தானே கற்பலகையில் தன் விரலால் வரைந்த நாள்.
6. யேகோவா இஸ்ரவேலின் தெய்வமென்று காண்பிக்க தமதடை யாளமாய் தந்த பரிசுத்த நாள்.
7. பாபிலோன் சிறைக்குப் பின் பக்தன் நெகேமியாவும் பண்பாய் சீர்த்திருத்தம் செய்த திரு நாளிதே.
8. ஓய்வுநாளின் ஆண்டவர் தோன்றினார் இப் பூவிலே உன்னதனார் நெறியுடன் ஒழுகினார் தம் நாளிலே.
9. ஓய்வு நாளாசரிப்பை யூதர் பாரம்பரியத்தால் திரிவுசெய்ததால் திருத்தினார் நற் செய்கையால்.
10. ஆதி அப்போஸ்தலர்கள் ஆதி சபையாருடன் அதி வினய பக்தியாய் ஆசரித்த ஓய்வுநாள.
11. இன்றும் பக்தர் கொண்டாடும் யேகோவாவின் இன்பநாள் என்றும் புதிய பூமியில் மீட்கப்பட்டோர் தொழுகை நாள்.