ஆசை இயேசு ராஜனின்
aasai yesu raajanin
ஆசை இயேசு ராஜனின் கோலம் - ஆச்சரியமே
1. அழகுடன் செளந்தரிய மில்லை அவரைப் பார்க்க ரூபமு மில்லை - ஆசை
2. இளங்கிளையோ துளிர்க்கும் வேரோ என்னரும் நேசர் எழும்பும் கோலம் - ஆசை
3. துக்கம் நிறைந்தோர் பாடு சகித்தோர் தொல்லை சுமந்தோர் கைவிடப்பட்டோர் - ஆசை
4. ஆடுகளைப் போல நம் வழிவிட்ட அக்கிரமம் முற்றும் தூக்கிச் சுமந்தோர் - ஆசை
5. ஏழையென் ரோகம் ஏற்ற தழும்போ என்னரும் நேசர் தம்முடல்லாம் - ஆசை
6. நெருக்கப்பட்டாலும் ஒடுக்கப்பட்டாலும் நேசரே தம் வாயைத் திறக்க வில்லை - ஆசை
7. வார்த்தையினாலும் காக்கி வைத்த பிதா வாதைக்குட்படுத்த வாஞ்சித்தாரோ உம்மை - ஆசை
8. அலகை வென்றதும் அடிமையானதும் பலவான்களை நீர் பங்கிட்டு கொள்ளவோ - ஆசை