ஆசை நேசரைக் கண்டேனே
aasai nesaraik kandenae
ஆசை நேசரைக் கண்டேனே!
1.சுந்தர மைந்தன் இயேசு கிறிஸ்து என்றநாமமே நிந்தைக் கோலம் பூண்ட பாலன் வேந்தன்இயேசுவை!
2.எல்லையில்லாகிருபை நிறைந்த ஜீவஊற்றாமே அல்லல் தீர்க்கும் அன்பின் வள்ளல்எல்லா நாளுமே!
3.இவ்வுலகில் உள்ள பொருள் யாவும்நீங்குமே எந்தன் ஆசை உந்தன் வீடே என்றும்வாழ்வேனே!
4.துன்பம் துக்கம் தொல்லை யாவும்என்னை மூடினும் அன்பரென்னை இன்ப வீட்டில் கொண்டுசேர்ப்பாரே!
5.என்னை ஆண்ட தேசத்திற்கு என்னசெய்வேன் ஒன்றுமில்லை என்னையே தந்தேன்!
6.எக்காளம் தொனித்திடவேகாலமாயிற்றே மேக மீதில் ஜீவநாதன் வேகம் வாராரே!