ஆசை மணாளா நேச
aasai manaalaa nesa
ஆசை மணாளா நேச கண்ணாளா என்று நீர் வருவீர் சோபிதந்தனிலே ஏங்குதே எந்தன் உள்ளமே
1. நாட்களும் புல்லின் பூவைப்போல் உதிர நாதனே தாமதம் ஏன்? நானிலம் ஏங்குதே தவிக்கிறார் தூயவர் நாயகனே வருவீர் - ஆசை
2. எக்காளம் முழங்கும் அக்கணமதிலே அக்களிப்புடன் தூயவர் எக்கண நொடியில் மறுரூபமாகியே அக்கரை தன்னில் சேருவார் - ஆசை
3. தேகம் அழிவின் போர்வையை களைந்தே காகம் நித்திய வீடை ஏகமாய் தரிக்க ஆவலாய் நிற்கிறார் வேகம் வாரும் மணாளனே - ஆசை
4. அப்போஸ்தலர் வரும் நல் உபதேசத்தால் ஒப்புரவான சபையை எப்போதும் உமது சந்நிதி நிறுத்த ஒப்பில்லா நேசர் வருவீர் - ஆசை
5. உயிரும் உடலும் போல சீயோன் காலமும் துயர் நீங்க மகிழ் கொள்ளவே அயராது கண்களும் நோக்கி நின்றிடுதே உயர் மணவாளா வாரீரோ? - ஆசை