ஆசை ஆசை ஆசை
aasai aasai aasai
ஆசை ஆசை ஆசை ரொம்ப நாளா எனக்கொரு ஆசை மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை தான் பணத்தாசை பொருளாசை வீணாசை தான்
பாட்டுப் பாட எனக்காசை அந்த பாடலில் துதி போட ஆசை -(2) பரலோகம் சென்றிட ஆசை அங்கே பரமனை தொழுதிட ஆசை -(2)
வேதம் படிக்க எனக்காசை -அதில் வேதனை மறந்திட ஆசை -(2) வெண்ணாடை அணிந்திட ஆசை விண்ணவரோடு நடந்திட ஆசை -(2)
சிலுவையை சார்ந்திட ஆசை சிலுவை சுமந்து நடந்திட ஆசை -(2) சுயத்தை வெறுத்திட ஆசை சுத்த சாட்சியாய் வாழ்ந்திட ஆசை -(2)