ஆருயிர் அன்பராம் இயேசுவே
aaruyir anbaraam yesuvae
ஆருயிர் அன்பராம் இயேசுவே ஆதியும் அந்தமுமானவரே வாழ்நாளெல்லாம் உம்மைப் பாடுவேன் கிருபைத் தந்தென்னை நடத்திடுமே
1. போக்கையும் வரத்தையும் பத்திரமாய் சேதம்வராமல் காப்பவரே என்முன் செல்லும் உம் சமூகம் என்ற வசனத்தை என்றும் நினைப்பவரே
2. காத்திடுவார் உன்னை என்றுமவர் பாதங்கள் இடறி போவதில்லை இருளை உனக்கு வெளிச்சமாக்கி நித்திய வெளிச்சம் தந்திடுவார்
3. இப்புவி யாத்திரை கசந்தமாரா மதுரமான நாட்கள் உண்டு ஓட்டத்தை ஜெயமாய் முடித்து சென்று அன்பரை முகமுகமாய் காண்போம்