ஆறுதலின் நாயகனே அல்லல் தீர்க்கும்
aarudhalin naayaganae allal theerkkum
ஆறுதலின் நாயகனே அல்லல் தீர்க்கும் வல்லவனே பாவம் போக்கும் பரிசுத்தரே பாதம் பணிந்து பாடுவேனே
1. உலகம் மாயை என்றறிந்தேன் உலகில் ஒன்றும் இல்லை ஐயா நேசித்தவர் பிரிந்திட்டாலும் நேசர் என்னை விட்டுப் பிரியார்
2. யாருமற்ற அகதியானேன் ஏற்றுக் கொள்வார் யாருமில்லை என்று சொல்லி கதறும் போது ஏந்தினீரே உம் கரத்தால்
3. உற்றார் பெற்றார் யாவும் இழந்து உரிமையாக உம்மேல் சார்ந்தேன் திக்கற்றோராய் கைவிடேன் என்ற சத்தம் கேட்டு சாந்தி அடைந்தேன்