ஆர்ப்பரித்தென்றும் அகமகிழ்வேனே
aarpparithendrum agamagizhvenae
ஆர்ப்பரித்தென்றும் அகமகிழ்வேனே ஆனந்தமாக பாடுவேன், ஆண்டவர் அடியார்க் அருளிய அளவில்லா ஆசிகள் நினைந்து,
நான் புகழ்ந்திடுவேன். அவர் நாமத்தையே; என் ஆவல் தீர நிதம் பாடிடுவேன். ஒப்பில்லாத நேசரின் திருநாமம் அரணே, எப்போதும் தங்கும் புகலிடமே.
2. கண்மணி போல் கடந்த நாட்களிலே கருத்தாய்ப் பாதுகாத்தனர், காற்றையும் கடலையும் கடந்து நான் சென்றிட கிருபை ஈந்ததினால்,
3. பலவித நாசம், பயங்கர மோசம் பலமாய்ச் சோதனை சூழ்கையில், பரிசுத்தமாக இப்பாதையில் ஓட்டப் பான் இயேசு செய்ததினால்,
4. திகையாதே நான் உன் தேவன் என்றுரைத்து திருவாய் மலர்ந்து என்னைத் தேற்றினார். திசையறியாது தியங்கையில் பாதையில் தீபம் என் இயேசு தானே
5. அன்பரின் இன்ப நாமத்தை புகழ ஆயிரம் நாவுகள் போதுமோ? ஆதியும் அந்தமும் ஆச்சரியமே இவர் நீதியின் சூரியனே!