ஆர்ப்பரிப்போம் ஆனந்தமாய்
aarpparippom aanandhamaay
ஆர்ப்பரிப்போம் ஆனந்தமாய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே
1. அமைதலாயுமல்ல அசதியோடும் அல்ல இடி முழக்கத்துடன் எக்காள சத்தம் தொனித்திட
2. கை தாளங்கள் முழங்க கர்த்தரைப் பாடிக் புகழ்ந்திடுவோம் கரங்களை உயர்த்தி கெம்பீரமாய் துதித்திடுவோம்
3. கஷ்டங்கள் வந்தாலும் கர்த்தர் இயேசு விடுவிக்கிறார். கூடவே இருப்பார் கைத்தூக்கி கரை சேர்த்துவிடுவார்
4. பாவங்கள் நீக்கினார். சாப ரோகங்கள் நீக்கினார் பாதையும் காட்டினார் பரிசுத்தரின் ஒன்றாக்கினார்
5. மரண பயம் திகில் மலைபோல சூழ்ந்தாலும் மாறாத கர்த்தர் பெலன் தந்து எம்மை தேற்றுகிறார்
6. சீக்கிரம் வருவார் சீயோனை சேர்ந்திடவே சிங்காரத்தின் சீர் இயேசு ராஜனை சந்திப்போம்