ஆரிவராரோ? கனவினில்
aarivaraaro? kanavinil
1. ஆரிவராரோ? கனவினில் அலறுவதிவராரோ? காரிருளில் ஆ - ஆ - மனம் நோகுதே காயம் பாடுதே அகம் வாடுதே முகம் மாறுதே
2. தேடுவதேனோ யூதரும் தொலைத்திடும் வகையேனோ? சேதமற்றோரிவர் ஆ - ஆ - ஜெகதீசன், மெய் தீபன் என் ஜீவனே, ஏக ரூபனே
3. வேண்டுதல் கேளிர் பாவிக்காய் வேண்டும் தொனி கேளிர் விண் வனே இவர் ஆ - ஆ - அண்ணலே, விண் மன்னன் கண்ணீராகுதே கரம் சேருதே
4. பலியாவோரிவரோ, பாவத்தின் பலனிவர் மேல் தானோ! அலறாயோ மனம் ஆ - ஆ பல சாரமே வடிந் தேடுதே பலியாகவே இவர் பாரிலே
5. தொல்லைகளடைந்தோ கொல்கொத்தாவில் மரமீதறைந்தோ கள் வனன்றோ இவர் ஆ - ஆ - உதிரமாடன் ஜல மோடுதே உள்ளம் பாவிக்காய் உருகிடுதே
6. பாடுகள் சகித்து பகைவரின் பாவங்களை யெடுத்தோ பரிகரித்தீரோ ஆ - ஆ - மனமாற்றமும் எமை மீட்கவும் பலியானால் நிதம் வாழ்த்துவோம்