ஆரவார எக்காளத்தொணியோடே
aaravaara ekkaalathoniyodae
ஆரவார எக்காளத்தொணியோடே - நடு ஆகாயத்தில் இறங்கிடுவார் ஆவலோடே காத்து சுத்தராய் ஜீவித்து நாம் அவரோடே இருந்திட பறந்திடுவோம்
வந்திடுவார் அதி சீக்கிரமாய் - இயேசு தந்திடுவார் தூய பிரதிபலனை செய்திடவே திருச் சித்தமதையே முற்றும் அர்ப்பணித்திடுவோம்
நினையாத நேரத்தில் இயேசு வந்திடுவார் - தம்முன் நிறுத்தும் மகிமை சபைக்காய் கனையிருள் கலாம் வருமுன் வருகையை நினைத்து ஜெபத்தின் விழித்திருப்போம் - வந்திடு
கஷ்டம் நிந்தை இடுக்க நெருக்கங்கள் - பல நஷ்டங்களை சகித்தோரெல்லாம் துஷ்டனை வென்று சிங்காசனமடைந்து தம் இஷ்டமாய் யுகாயுகம் ஆண்டிடுவோம் - வந்திடு
அழுகையின் தாழ்வை உருவ நடந்து - நாம் அழியா ஊற்றாய் மகிழ்வோம் வழுவாமல் சீயோன் சிகரில் காணப்பட கழுகு போல் புதுபெலன் அடைந்திடுவேன் - வந்திடு
5. ஜீவனையும் ஊற்றி நாம் சந்தோஷமாய் - அவர் சேவை என்றும் செய்திடுவோம் சீயோனை கட்டி தமது மகிமையில் சேர்த்திட சீக்கிரமே வெளிப்படுவார். - வந்திடு