ஆராய்ந்து பாரும் தேவனே
aaraayndhu paarum devanae
ஆராய்ந்து பாரும் தேவனே என்னை நீர் அறிவீர் புதிதும் ஜீவனுமான பாதையில் ஓடச் செய்யும்
உம் வார்த்தை கேட்டிடாமல் குற்றங்கள் பல செய்தேன் கர்த்தாவே அவற்றை காணத்தக்கதாய் என்னிலே வெளிச்சம் காட்டிடுமே
மார்த்தாளைப் போலிருந்தேன் வீணாக உழைத்திட்டேன் நான் தேவை ஒன்றே அதை நான் அறிந்தேன் பாதத்தில் இருக்க கற்றுக்கொண்டேன்
வீண் வார்த்தை என் வாயினால் நினைக்காமல் பேசுகின்றேன் என் வாய்க்கு காவல் இன்றே நீர் வையும் என் தூய வாழ்வை காத்துக்கொள்ள
உம் தூய ஆவியாலே துர் ஆசை நீங்கச்செய்யும் உண்மை மனசாட்சி என்னில் உண்டாக உணர்வுள்ள இதயத்தை தந்தருளும்
சுயம் என்னில் சாக வேண்டும் நீர் என்னில் பெருக வேண்டும் என் சித்தம் விரும்பேன என்னையே பலியாய் தந்தேன் உம் சேவை செய்திடவே!
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D D A D G A A D D G Em A D D Em A G A D D G Em A D D Em A G A D D G Em A D D Em A G A D D G Em A D D Em A G A D D G Em A D D Em A G A D