ஆராய்ந்து முடியாத அற்புதம்
aaraayndhu mudiyaadha arpudham
ஆராய்ந்து முடியாத அற்புதம் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அதிசயம் என் வாழ்வில் செய்பவரே -2
கருவினிலே என்னை கண்டீரே கண்மணிபோல் என்னை காத்தீரே -2 வழிகள் தடம் மாறும் போது வழிகளை செவ்வைபடுத்தி கால்கள் சறுக்கும் போது பாதங்களை நீர் ஏந்தி கண்மலையின் மேல் நிறுத்தியே என் அடிகளை உறுதிபடுத்துமே
எத்தனையோ நன்மை செய்தீரே அதற்கீடாய் நான் என்ன கொடுப்பேன் -2 உம்மை நான் மறந்த போதும் என்னை மறவாமல் காத்து உம்மை விட்டு தூரப்போயும் என் கூடவே இருந்து கரம்பிடித்து வழிநடத்தியே என் கண்ணீரெல்லாம் போக்கிவிட்டீரே