ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தவர்
aaraayndhu mudiyaadha adhisayangal seydhavar
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தவர் அளவிட முடியாத அன்பு வைத்தவர் எண்ணி முடியாத இரக்கம் என்னில் களித்தவர் என்னையே கவர்ந்துக்கொண்ட நேசர் பெரியவர் எல்லையில்லா நன்மைகளை எனக்கு என்றும் செய்தவர் எண்ணிலடங்கா கிருபை எனக்கு ஈந்தவர் ஏற்றம் இறக்கத்தினில் என்கூட வந்தவர் என் பெயரை உள்ளங்கையில் வரைந்துக்கொண்டவர்
உம்மைப்போல ஒரு தெய்வம் நான் உலகில் கண்டதில்லை உம்மைப்போல ஒரு நேசர் நான் இனியும் காண்பதில்லை -2
ஒன்னுமில்லா என்னையே உண்மையாய் நேசிக்க உம்போல தெய்வம் இங்கு யாருமில்லையே உறவுகள் மறந்தாலும் மாறாத நேசரே உம் அன்புக்கு ஈடு இணையில்லையே பாடுகள் என்னையே சூழ்ந்து நின்றாலும் படைத்தவர் நீர் என்னோடு பயமில்லையே இரதங்களும் குதிரைகளும் என்பின் தொடர்ந்தாலும் செங்கடல் பிளந்தவர் நீர் எனக்கு முன்னே -உம்மைப்போல
மண்ணான என்னையே மகனாய் அழைத்தவர்நீர் நன்மையான ஈவுகளை எனக்குத் தந்தீரே என்னை சுகமாக்க நீர் காயப்பட்டீரே உம் உயிர் கொடுத்து எனக்கு ஜீவன் தந்தீரே பாதை எல்லாம் உம் தூதர்கள் கொண்டு என்னை கால்கள் இடறாமல் காத்துக்கொண்டீரே எனக்காய் பரிந்து பேசி நாட்களைக் கூட்டித்தந்து நித்தமொரு புது நாளைக்காணச்செய்தீரே -உம்மைப்போல