ஆராரோ பாலா நீ தூங்கு
aaraaro paalaa nee thoongu
ஆராரோ பாலா நீ தூங்கு தேவாதி தேவா நீ தூங்கு-2 கண்ணான கண்ணே கருணை வடிவே தூய பாலனே கண் மூடி தூங்கு-2-ஆராரோ
1.வானவர் கூட்டமே வாழ்த்திட வந்ததோ ஆயர்கள் கூட்டமே மாந்தர்க்கு சொன்னதோ-2 வாழ்வை அளித்திட ஜீவன் கொடுத்திட வானக மன்னவா புவியினில் வந்தாயோ-2 வானக மன்னவா புவியினில் வந்தாயோ-ஆராரோ
2.கடுங்குளிர் காற்று உன்னை வாட்டுதோ புல்லனை மஞ்சம் துயிலினை கெடுத்ததோ-2 வாழ்வை அளித்திட ஜீவன் கொடுத்திட வானக மன்னவா புவியினில் வந்தாயோ-2 வானக மன்னவா புவியினில் வந்தாயோ-ஆராரோ