ஆராதிப்போம் நம் தேவனை
aaraadhippom nam devanai
ஆராதிப்போம் நம் தேவனை அவர் ஜீவிக்கின்ற கன்மலை ஆராதிப்போம் நம் இயேசுவை - அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாரே
செங்கடல் பிளந்ததே யோர்தான் நதி விலகிற்றே - எரிகோ மதில் வீழ்ந்ததே உன்னை ஜெயமாய் நடத்துவார் கர்த்தர் ஜெயத்தில் வல்லவர் உன்னை ஜெயமாய் நடத்துவார்
ஆராதனை ...ஆராதனை (4)
மரித்தவன் உயிர்த்தானே அவர் வாயின் வார்த்தையால் அவர் வார்த்தை அற்புதம் உன்னை வளமாய் மாற்றுதே
துதித்திடும் மாந்தரை அவர் வார்த்தையால் உயர்த்துவார் அலைபோன்ற சோதனை அவர் வார்த்தையால் மாறுமே